Subscribe Us

ஆண்கள் எந்த மாதிரி இருந்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்... இந்த 5 விஷயம் செஞ்சாலே போதுமாம்...

 ஆண்களுக்குப் பொதுவாக பெண்கள் என்றாலே பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அப்படி கிடையாது. தங்களுக்குள் சில வரையறைகளை வைத்திருப்பார்கள். அப்படி பெண்களுக்கு பிடித்த ஆணாக இருக்க வேண்டுமென்றால் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.




ஆண்களிடம் பெண்களுக்கும் பெண்கள் மேல் ஆண்களுக்கும் சில விஷயங்கள் பொதுவாக பிடித்திருக்கும். அதில் ஆண்கள் தான் பெண்களைக் கவர்வதற்கான நிறைய விஷயங்களை முயற்சி செய்வார்கள். அதில் நிறைய தோல்வியும் அடையலாம். வெற்றிக்கும் வாய்ப்பு உண்டு. அப்படி பெண்களை இம்ப்ரஸ் செய்ய ஆண்கள் செய்யும் எந்த விஷயங்களைப் பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

​பின்னால் துரத்துவது

                        

தங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ தன்னைத் துரத்தி துரத்தி யாரேனும் ஆண்கள் பின்தொடர்ந்து காதல் செய்தால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

​சர்ப்பிரைஸ் டேட்டிங்

                            

நெருங்கிய நட்புடன் பழகும் ஒரு ஆண் திடீரென டேட்டிங் போன்ற விஷயங்களை செய்து தங்களை சர்ப்ரைஸ் செய்யும் ஆண்களைப் பெண்களுக்கு மிகப் பிடிக்கும்.

அதேபோலஆர்வமூட்டும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

​மரியாதையாக நடத்துவது

                              

தன்னை வெளியில் அழைத்துச் செல்லும்போது கவனமுடன் பார்த்துக் கொள்வது, கார் கதவுகளை தனக்காக திறந்து விடுவது, கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வது, அதேபோல பொது வெளியிலும் தனிமையில் இருக்கும்போது தன்மை மரியாதையுடன் நடத்தும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

​ஆர்வத்துடன் கேட்பது


                       

பொதுவாக பெண்களுக்குத் தங்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்வதிலும் தன் வீட்டில் தன்னை இப்படி பார்ப்பார்கள், அப்படி நடத்துவார்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்வதிலும் சந்தோஷம காண்பார்கள்.

அப்படி அவர்கள் எடுத்துச் சொல்லும்போது, அதை ஆர்வத்துடன் கேட்கும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

​நேர்மறையாக விரும்புதல்

                       

பெண்கள் ஒரு ஆண் தன்னை உண்மையாகவே நேசிக்கிறான் என்பதை மிக எளிமையாக உணர்ந்து கொள்வாள்.

அப்படி தன்னையும் தன்னுடைய குணங்களையும் ஏற்றுக் கொண்டு, தன்னுடைய நெகட்டிவ் விஷயங்களைப் பொருட்படுத்தாமல் நேர்மறை விஷயங்களை அதிகமாக நேசிக்கிற ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

5

                5

Post a Comment

0 Comments